10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் கல்வி பயின்று, சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் காமராஜர் விருது வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி விருதுநகரில் நடைபெற்ற கல்வித்திருவிழாவில் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய செங்கோட்டையன், ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் வழியில் சிறந்து விளங்கும் 15 மாணவர்கள் காமராஜர் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுவார்கள் என தெரிவித்தார். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.