சென்னை விமானநிலையத்தில் இனிமேல் தமிழுக்கு இடமில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை விமானநிலையத்திலுள்ள அண்ணாவின் புகைப்படத்தை மக்கள் பார்வையில் படும் வகையில் இடம் மாற்றி வைக்க வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று சமீபத்தில்தான் அந்தப் புகைப்படம் மாற்றி அமைக்கப்பட்டது. அதற்குள் அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது சென்னை விமானநிலைய நிர்வாகம்.
இனிமேல் விமானங்கள் வருகை, புறப்பாடு பற்றிய அறிவிப்பு பலகையில் தமிழில் வெளியிடப்படாதாம். காலை நேரங்களில் மட்டும் தமிழ், இந்தி நீக்கப்பட்டு ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தப்படுவதாக விமானநிலைய இயக்குநா் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுவரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என் 3 மொழிகளில் அறிவிப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில் இனி ஆங்கிலத்தில் மட்டும் அறிவிப்பு தரப்படும் என்ற முடிவால் பயணிகள் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.