தமிழ்நாடு

படகு மூழ்கடிப்பு:இந்திய கடலோர காவல் படை மீது புகார்

படகு மூழ்கடிப்பு:இந்திய கடலோர காவல் படை மீது புகார்

webteam

இந்தியக் கடலோர காவல் படை, மீண்டும் தமிழக மீனவர்களின் புகாருக்கு ஆளாகியுள்ளது. 

நடுக்கடலில் தங்கள் படகு மீது ரோந்து கப்பலை மோதி மூழ்கடிக்கச் செய்ததாக பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியக் கடலோர காவல் படை மீது குற்றம்சாட்டியுள்ளனர். 
கடலில் படகு மூழ்கியதால் நீரில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும், கடலில் மூழ்கிய மீனவர் படகை மீட்டு பழுதுபார்த்து தருவதாக கடலோர காவல் படை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

அண்மையில் நடுக்கடலில் இந்திய கடலோர காவல் படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காயம் ஏற்பட்டதாக மீனவர்கள் புகார் தெரிவித்த நிலையில், மீண்டும் ஒரு புகார் எழுந்துள்ளது.