செம்மொழி தமிழாய்வு மையத்துக்கான நிதியை மத்திய அரசு பாதிக்கும் கீழாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2015-16ஆம் நிதியாண்டில் செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு அதிகபட்சமாக 11 கோடியே 99 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், 2016-17ஆம் நிதியாண்டில் 5 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியாண்டில் செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு 3 கோடி ரூபாய் மட்டுமே பெறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், 2008-09ஆம் ஆண்டில் இருந்து செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு ஒதுக்கப்பட்ட 79 கோடி ரூபாயில் 9 கோடி ரூபாய் பயன்படுத்தப்படாததும் தெரிய வந்துள்ளது.
தமிழாய்வு மையத்துக்கு தேவையான நிதியை, மத்திய அரசு ஒதுக்கி வருவதாகவும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாகவும் மையத்தின் துணைத் தலைவர் பிரகாசம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.