தமிழ்நாடு

தமிழக தலைமைச் செயலாளரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு

தமிழக தலைமைச் செயலாளரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு

webteam

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மருத்துவர்கள் காவல்துறையினர் அரசு ஊழியர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் கிண்டி கிங் ஆய்வக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.