தமிழ்நாடு

மத்திய சுற்றுச்சூழல்துறை திருத்தங்கள் குறித்த ஆவணத்தில் தமிழ் புறக்கணிப்பு: சு.வெங்கடேசன்

Veeramani

ஒன்றிய சுற்றுச்சூழல்துறை மேற்கொள்ளவுள்ள திருத்தங்கள் குறித்த ஆவணம் தமிழ் மொழி தவிர பிற 12 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் ட்வீட் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழ். FC Act,1980ல் ஒன்றிய சுற்றுச்சூழல்துறை மேற்கொள்ளவுள்ள திருத்தங்கள் குறித்த ஆவணம் தமிழ் மொழி தவிர பிற 12 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்ட போதும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது. விரைவாக தமிழில் இந்த ஆவணத்தை வெளியிடுகஎனத்தெரிவித்திருக்கிறார்.