முதலமைச்சர் ஸ்டாலின் - அமித்ஷா fb
தமிழ்நாடு

அமித் ஷா மட்டுமல்ல, எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின்

அமித் ஷா மட்டுமல்ல, எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்திருக்கிறார்.

PT WEB

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு மாநிலத்துக்குள் சென்று, அங்குள்ள கட்சியை உடைத்து ஆட்சியமைப்பதைப் போல தமிழ்நாட்டில் செய்ய முடியாது எனக் கூறினார்.

டெல்லியின் ஆளுமைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது எனக் கூறிய முதல்வர், 2026ஆம் ஆண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் எனக் கூறினார்.

கொத்தடிமை துரோகக் கூட்டணியுடன் சேர்ந்து ஜெயிக்க நினைக்கிறீர்கள், அது ஒருபோதும் நடக்காது எனத் தெரிவித்த முதல்வர், தேர்தலுக்குள் பல அமைப்புகள் மூலம் மிரட்டுவீர்கள் என தெரியும் என்றும், அமித்ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது எனக் கூறினார்.