தமிழ்நாடு

ராணுவ மையத்துக்கு கொடி: அறிமுகப்படுத்தினார் பிரணாப்

webteam

சென்னை விமானப்படைத் தளத்தில் உள்ள இயந்திரவியல் பயிற்சி‌ மையம் மற்றும் பதான்கோட் ஹெலிகாப்டர் பிரிவுக்கான வண்ணக் கொடிகளை உயரதிகாரிகளிடம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக நேற்று வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தாம்பரம் விமானப் படைத் தள விழாவில் இன்று காலை 9 மணியளவில் பங்கேற்றார். விமானப் படைத் தளத்துக்கு வருகை தந்த அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் விமானப் படை உயரதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

பின்னர் நடந்த நிகழ்ச்சி‌யில், குடியரசுத் தலைவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதை ஏற்ற பிரணாப், தாம்பரம் விமானப் படை வளாகத்தையும் வீரர்களின் அணிவகுப்பையும் வாகனத்தில் சுற்றிப் பார்த்தார். விமானப்படைத் தளத்தில் உள்ள இயந்திரவியல் பயிற்சி‌ மையம் மற்றும் பதான்கோட் ஹெலிகாப்டர் பிரிவு ஆகியவற்றுக்கான வண்ணக் கொடிகளை உயரதிகாரிகளிடம் பிரணாப் வழங்கினார்.

இதனையடுத்து வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரணாப், உலகின் வலிமையான ராணுவத்தை இந்தியா பெற்றிருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார். நாட்டைப் பாது‌காப்பதில் மட்டுமின்றி இயற்கைப் பேரிடர் காலங்களிலும் ராணுவ வீரர்கள் சிறப்பாகப் பணியாற்றி வருவதாகவும் புகழாரம் சூட்டினார்.