தமிழ்நாடு

’கதிராமங்கலம் மக்களுடன் நாளை பேச்சு’: தஞ்சை ஆட்சியர் அறிவிப்பு

’கதிராமங்கலம் மக்களுடன் நாளை பேச்சு’: தஞ்சை ஆட்சியர் அறிவிப்பு

webteam

ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் கதிராமங்கலம் மக்களிடம் நாளை கருத்து கேட்கப்படும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவித்துள்ளார்.

கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கசிந்த குழாய்கள் மாற்றப்பட்ட இடத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில்ஆய்வு செய்தார். மேலும், குழாய்களின் தரம் குறித்து ஓஎன்ஜிசியிடம் ஆட்சியர் அறிக்கை அளிக்கக் கோரினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கதிராமங்கலம் மக்களிடம் நாளை திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்கப்பட்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் தெரிவிக்கப்படும் என்றார். எண்ணெய்ப் படர்ந்த நீர், ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட குழாய்கள் சரிசெய்யப்பட்டுள்ளதால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் ஆட்சியர் கூறினார். கதிராமங்கலம் மக்களின் குடிநீர்த் தேவைக்காக 2 ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இயல்புநிலை திரும்பியுள்ளதால், கதிராமங்கலத்திலிருந்து 90 சதவிகித போலீசார் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் கூறியுள்ளார்.