தமிழ்நாடு

கேளிக்கை வரி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி

கேளிக்கை வரி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி

webteam

தமிழகத்தில் திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் கேளிக்கை வரியுடன் சேர்த்து ஜிஎஸ்டி வரியையும் செலுத்த வேண்டும் என்ற நிலையில் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், கேளிக்கை வரி தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. திரைத்துறை சார்பில் அபிராமி ராமநாதன், நடிகர் விஷால் ஆகியோரும், அரசு சார்பில் தொழில்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறை செயலாளர் சண்முகம் ஆகியோர் பங்குபெற்றனர். ஆனால் தீர்வு எதுவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தை விவரங்களை அமைச்சரிடம் தெரிவித்து அதன்பின் முடிவை அறிவிப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.