தமிழ்நாடு

தலைமன்னார் டூ தனுஷ்கோடி: கடல் பகுதியை 13.35 மணிநேரத்தில் நீந்தி 48 வயது பெண் சாதனை

kaleelrahman

தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 13.35 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்த 48 வயது பெண்.

தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே உள்ள கடல் பகுதியில் பல நபர்கள் நீந்தி இதுவரை சாதனை செய்துள்ளனர். முதல்முறையாக ஒரு பெண் இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையே சுமார் 28 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடலில் நீந்தி செல்வதற்காக ஹைதராபாத்தை சேர்ந்த ஷ்யாமளா ஹோலி என்கின்ற பெண் 18-ம் தேதி ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையிலிருந்து ஒரு விசைப்படகில் 14பேர் கொண்ட குழுவுடன் தலைமன்னார் புறப்பட்டுச் சென்றார். பின்னர் தலைமன்னார் கடல் பகுதியிலிருந்து நீந்த துவங்கி சர்வதேச கடல் எல்லை வரை இலங்கை கடற்படை பாதுகாப்பு வழங்கியது.

அதைத்தொடர்ந்து இந்திய கடல் பகுதிக்குள் நீந்தி வரும்போது கடல் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் நீந்துவதில் சற்று சிரமம் ஏற்பட்டது. இதனால் சற்று காலதாமதமாக அளவில் 13.35 மணிநேரத்தில் தனுஷ்கோடி வந்தடைந்தார்.

தனுஷ்கோடி வந்தடைந்த ஷ்யாமளா ஹோலியை சமூக ஆர்வலர் மற்றும் சுற்றுலா பயணிகள் பொன்னாடை, மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்று கொண்டாடினார்கள். இது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ஷ்யாமளா ஹோலி தெரிவித்தார். ஒரு பெண் முதல் முறையாக இலங்கை தலைமன்னார் கடல் வழியாக ராமேஸ்வரம் நீந்தி வந்தது இதுவே முதல் முறையாகும்.