தமிழ்நாடு

பாகுபாடின்றி நடவடிக்கை எடுப்பேன்: திருநங்கை எஸ்.ஐ. உறுதி!

பாகுபாடின்றி நடவடிக்கை எடுப்பேன்: திருநங்கை எஸ்.ஐ. உறுதி!

rajakannan

சென்னை சூளைமேடு உதவி ஆய்வாளராக பொறுப்பேற்று கொண்ட திருநங்கை பிரித்திகா யாஷினி, தவறு செய்தவர்கள்‌ மீது எந்த பாகுபாடும் இன்றி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியைச் சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாஷினி, கடந்த கடந்தாண்டு காவ‌வர் தேர்வில் வெற்றி பெற்று உதவி ஆய்வாளராக தேர்வானார். வண்டலூரில் பயிற்சி முடித்து பின்னர் தருமபுரி காவல் நிலையத்தில் இவர் பயிற்சி பெற்று வந்தார். அதன் இறுதியாக 244 பேர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு வகுப்புகளில் கலந்து கொண்டு அதை நிறைவு செய்தனர். பயிற்சி முடித்த 244 பேருக்கும் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. திருநங்கை பிரித்திகா யாஷினி, சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரித்திகா யாஷினி, தவறு செய்தவர்கள்‌ மீது எந்த பாகுபாடும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தமிழக காவல் துறையில் இணைந்து பணியாற்ற வந்துள்ள பிரித்திகா யாஷினிக்கு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று சூளைமேடு காவல் ஆய்வாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிலேயே மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஒருவர் காவலராக பணி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும் என்று கூறினார்.