தமிழ்நாடு

கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: முதலமைச்சர் அறிவுறுத்தல்

கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: முதலமைச்சர் அறிவுறுத்தல்

webteam

பாலில் கலப்படம் செய்யும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தி இருக்கிறார்.

தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முதல்வரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 
அப்போது கலப்படத்தில் ஈடுபடும் பால் நிறுவங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்வது குறித்து முதல்வரிடம் விளக்கினேன். பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  
தவறு செய்யும் பால் நிறுவனங்கள் இனி தமிழகத்தில் செயல்பட முடியாது. மக்களுக்கு தரமான பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது விருப்பு, வெறுப்பு இன்றி நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஃபார்மால்டிஹைடு என்ற கெமிக்கல் கலந்த பாலை குடிப்பதால் ரத்த நோய்கள் உருவாகலாம்.  
சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் முடிவுகள் வந்திருக்கின்றன. தவறு யார் செய்தனர் என்பது ஆய்வுக்கு பிறகு தெரிய வரும். ஆவின் பாலையும் ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதில் எந்தவித கெமிக்கலும் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதியுடன் கூறுகிறேன். குழந்தைகள் உட்கொள்ளும் பாலில் கலப்படம் செய்வதை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.