சசிகலா முதல்வராவதை ஜெயலலிதாவின் ஆன்மாவே ஏற்காது என்று லட்சியத் திமுக தலைவர் டி.ராஜேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், அவசர அவசரமாக சசிகலா தமிழகத்தின் முதல்வராவதற்கான அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். மேலும், ஜனநாயகத்துக்கு விரோதமாக சசிகலா முதல்வராவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். சசிகலா முதல்வராவதை ஜெயலலிதாவின் ஆன்மாவே ஏற்காது என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சசிகலா மீது சிலர் வெறுப்பு கொள்ளும் நிலை இருக்கிறது என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 12ஆவது முதலமைச்சராக அவர் நாளை அல்லது வரும் 9ம் தேதி பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.