அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி சென்னை மெரினாவில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக நடிகர்கள் டி.ராஜேந்தர் மற்றும் மயில்சாமி ஆகியோர் முழக்கங்களை எழுப்பினர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர். 21 மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் நடத்திய மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு வாடிப்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக நடிகர்கள் டி.ராஜேந்தர் மற்றும் மயில்சாமி ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.