தமிழ்நாடு

தீபாவளி ஷாப்பிங்: மழையிலும் தி.நகரில் குவிந்த மக்கள்

தீபாவளி ஷாப்பிங்: மழையிலும் தி.நகரில் குவிந்த மக்கள்

webteam

மழையையும் பொருட்படுத்தாமல் தீபாவளி பண்டிகைக்காக ஜவுளி மற்றும் இதர பொருட்களை வாங்க சென்னை தியாகராய நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். 

தீபாவளி பண்டிகை என்றாலே துணிக்கடைகள் மிகுந்த சென்னை தி.நகரில் கூட்ட நெரிசல் அதிகரித்து விடும். துணிகள், நகைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் என அனைத்து வித பொருட்களும் ஒரே இடத்தில் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைவரும் தி.நகர் நோக்கி படையெடுக்க தொடங்கிவிடுகின்றனர். இந்நிலையில் தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே இருப்பதால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று தி.நகரில் குவிந்தனர். 

இதனால் தி.நகர் பகுதி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கையாக 400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் 430 காவலர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 5 கண்காணிப்பு கோபுரங்களும், ஒவ்வொரு கடை நுழைவாயிலிலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஒலிபெருக்கி, துண்டு பிரசுரங்கள் மூலம் திருடர்கள் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.