சிபில் ஸ்கோர் புதியதலைமுறை
தமிழ்நாடு

சிபில் ஸ்கோர் அதிகம் வைத்திருப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இதை பாருங்கள்! எச்சரிக்கை செய்தி!

சென்னை பெரம்பூர், கேளம்பாக்கம், குன்றத்தூர் பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்று அளித்தனர்.

PT WEB

லோன் பெறுவதற்கான சிபில் ஸ்கோர் அதிகம் வைத்திருப்பவரா நீங்கள்?.. அப்படியென்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் மோசடி சம்பவம் ஒன்று
அரங்கேறியுள்ளது.

சென்னை பெரம்பூர், கேளம்பாக்கம், குன்றத்தூர் பகுதிகளை
சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்று அளித்தனர். அதில், கேளம்பாக்கம் பகுதியில் இன்ஃபினிட்டி ஹோம் அப்ளையன்ஸ் மற்றும் குன்றத்தூரில் ஸ்மார்ட் மொபைல் கடையை நடத்தி
வந்த கவிதா மற்றும் அவரது கணவர் யுவராஜ் ஆகியோர், கடைக்கு பார்ட்னராக இணைத்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக
தெரிவித்துள்ளனர்.

வங்கிகளில் கடன் பெற்று ஹோம் அப்ளையன்ஸ் கடைக்கு பொருட்கள் வாங்கி கொடுத்த நிலையில், தாங்கள் ஏமாற்றப்பட்டதால் வங்கிக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.