சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒன்றரை வயது குழந்தைக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அருகே தென்கரையை சேர்தவர்கள் ஆறுமுகம் -வள்ளிக்கண்ணு தம்பதியினர். இவர்களுக்கு பிரதிபா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. குழந்தைக்கு கடந்த நான்கு நாள்களுக்கு முன்னாள் சளி, காய்ச்சல் வந்துள்ளது. இதனை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.
தகவல் அறிந்து குழந்தையின் வீட்டிற்கே வந்து பரிசோதனை செய்த அரசு மருத்துவர் நாகேஸ்வரன், குழந்தையின் முழுமையான மேல் பரிசோதனைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்துள்ளார். மேலும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.