தமிழ்நாடு

ரூ.10 லட்சம் செலவில் பழனி ’கஸ்தூரி’க்கு நீச்சல் குளம்!

ரூ.10 லட்சம் செலவில் பழனி ’கஸ்தூரி’க்கு நீச்சல் குளம்!

webteam

பழனி, திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் வளர்க்கப்படும் கஸ்தூரி யானை குளித்து மகிழ பத்து லட்சம் ரூபாய் செலவில் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தில் கஸ்தூரி யானை குளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

புழனி முருகன் கோயிலில் கடந்த பல வருடங்களாக கஸ்தூரி என்று அழைக்கப்படும் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. 48 வயதை கடந்த கஸ்தூரி யானை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பழனி மலை அடிவாரத்தில் வலம் வந்து அனைவரையும் மகிழ்ச்சியடை செய்துவருகிறது. பழனி முருகன் கோயிலில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்வதுடன், தேரோட்ட நிகழ்ச்சியில் தேரை தள்ளி செல்லவும் கஸ்தூரி யானை பயன்படுத்தப்படுகிறது. 
பழனி கோயிலில் செல்ல பிள்ளையாக வலம் வரும் கஸ்தூரி யானை குளித்து மகிழ வசதியாக மலை அடிவாரத்தில் உள்ள தேவஸ்தான நிர்வாகத்திற்க்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் பத்து லட்சம் ரூபாய் செலவில் பெரிய நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்ட கஸ்தூரி யானை குளித்து மகிழ ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நீச்சல் குளத்தில் இறங்கிய கஸ்தூரி யானை குளத்தில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் குளிக்க வசதியாக கோயில் நிர்வாகம் ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஷவர் வசதியை செய்து கொடுத்திருந்தது. இந்த நிலையில் கஸ்தூரி யானைக்கு நீச்சல் குளமும் கிடைக்கப்பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.