தமிழ்நாடு

முகநூல் சர்ச்சை: முன்ஜாமீன் கோரிய எஸ்.வி.சேகர்..

முகநூல் சர்ச்சை: முன்ஜாமீன் கோரிய எஸ்.வி.சேகர்..

webteam

பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சித்த வழக்கில், பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசும் விதத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனையடுத்து பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பதிவிடப்பட்ட கருத்திற்கு நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்த அவரது முகநூல் பதிவை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் அளித்த புகாரின் பேரில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அதைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களாக எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், முன் ஜாமீன் கோரி அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் நண்பர் ஒருவர் அனுப்பியதையே தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாகவும், அது தவறாக உள்ளது என்பதை உணர்ந்தவுடனே நீக்கிவிட்டதாகவும் எஸ்.வி.சேகர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.