தமிழ்நாடு

சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கிறது - உயர்நீதிமன்ற நீதிபதி

சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கிறது - உயர்நீதிமன்ற நீதிபதி

webteam

நீட் தேர்வு தொடர்பான நடிகர் சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி A.B.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் எழுதியுள்ள கடிதத்தில் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் . கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் சென்று தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்ற சூர்யாவின் வரிகளை தனது கடிதத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சூர்யாவின் இக்கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. சூர்யாவின் இந்த கருத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். புதிய தலைமுறையில் வெளியான சூர்யாவின் அறிக்கையை பார்த்து இக்கடிதத்தை எழுதுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.