மருத்துவமனைகளில் எந்த துறை மூலம் சிறைக்கைதிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமோ, அந்தத்துறை மருத்துவரிடம் இருந்து ஆர்.எம்.ஓ., வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும். உடனடியாக அதை சிறை எஸ்.பி.,க்கு அனுப்பினால் அதிகபட்சமாக 2 முதல் 3 மணி நேரத்திற்குள் சிறையில் இருந்து ஒப்புதல் கடிதம் வாட்ஸ்அப் மூலம் பெறமுடியும். இதனால் கைதிகளுக்கான அறுவை சிகிச்சை எளிதாகிறது.
அதேவேளை, சிறைவாசிகள் சிடி ஸ்கேன் எடுக்கும்போது, அதன் செலவினை யார் ஏற்க வேண்டும் என்பது தொடர்பான குழப்பமும் இருந்த. இதனை தீர்க்கும் நோக்கில், சிறைத் துறையிடம் சிறைவாசிகளுக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட இவ்வகை மருத்துவ சேவைகள் முழுமையாக இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது .
இந்த செயல்முறை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் படி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இதன்மூலம், சிறைவாசிகள் உடனடியாக சிகிச்சை பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனை நடைமுறைக்கு கொண்டுவர சிறைத்துறையினர், சுகாதாரத்துறையி னர் ஒருங்கிணைத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.