SupremeCourt SenthilBalaji ED
SupremeCourt SenthilBalaji ED  ptweb
தமிழ்நாடு

தீர்ப்பு வெளியான உடனே டெல்லி பறந்த ED.. திருப்பி அனுப்பிய உச்சநீதிமன்றம்.. நடந்தது என்ன?

Angeshwar G

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் J.நிஷா பானு, D.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. முதலில் நீதிபதி ஜெ. நிஷா பானு வாசித்த தீர்ப்பில், செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவு சட்டவிரோதம் என்பதால், மேலகாவின் ஆட்கொணர்வு மனு விசாரணக்கு உகந்தது எனக் கூறி, செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டார். மேலும், காவல் துறை அதிகாரிகளுக்கான அதிகாரம், அமலாக்கத் துறையினருக்கு வழங்கப்படாததால், செந்தில் பாலாஜியை, அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என உத்தரவிட்டார்.

பின்னர் நீதிபதி பரத சக்ரவர்த்தி வாசித்த தீர்ப்பில், செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவு சட்டவிரோதமல்ல என்பதால், இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், நீதிமன்ற காவலிலேயே காவிரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சையை தொடரலாம் எனவும், உடல்நிலை சரியாகும் வரையிலோ அல்லது மேலும் 10 நாட்களுக்கோ காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வரை சிகிச்சை தொடரலாம் என அனுமதித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, பின்னர் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையை தொடரலாம் எனவும் உத்தரவிட்டார்.

senthilbalaji

சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவலில் இருக்கும் நாட்களாக எடுத்துக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி பரத சக்கரவர்த்தி, செந்தில் பாலாஜியின் உடல் நிலையை பொறுத்து, அமலாக்கத் துறையினர், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக, வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு அனுப்ப, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி நியமிக்கும் மூன்றாவது நீதிபதி, வழக்கை விசாரித்து அளிக்கும் தீர்ப்பே சென்னை உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பாக அமையும்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதங்களை முன் வைத்தார். அதில், செந்தில்பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால் அவரை எங்களால் விசாணைக்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதேநேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் எங்களால் இந்த விசாரணையை தொடரமுடிடியவில்லை. எனவே எங்களது கடமையை செய்ய முடியாத சூழலில் இருப்பதாக அமல்லக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில்பாலாஜி செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் என்றும் அவரிடம் விசாரணையை தாமதப்படுத்த தாமதப்படுத்த விசாரணை என்பது நீர்த்துப் போகும். ஏற்கனவே ஆதார அழிப்பு என்பது நடந்து வருகிறது. அந்த சூழலில் அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு தாமதப்படுத்தும் போது இன்னும் விசாரணையை மோசமானதாக ஆக்கிவிடும் என்ற குற்றச்சாட்டையும் அமலாக்கத்துறையின் சார்பில் வாதிடும் வழக்கறிஞர் முன்வைத்துள்ளார். மேலும் காலம் தாழ்த்தும் ஒவ்வொரு மணித்துளியும் வழக்கை நீர்த்துப் போகச் செய்துவிடும் என தெரிவித்துள்ளார்.

செந்தில்பாலாஜி ஏற்கனவே ரிமாண்ட் செய்யப்பட்டுவிட்டார். விசாரணைக்காக கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்ட பின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படுவது சட்டப்பூர்வமானது இல்லை. எனவே ஆட்கொண்ர்வு மனு விவகாரத்தில் எழும் சட்டக்கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் தான் விடை காண வேண்டுமே தவிர சென்னை உயர் நீதிமன்றம் தலையிட வேண்டாம் என்றும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பையும் தகவலாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் தனது வாதங்களை முன்வைத்தார். அதில், மூன்றாவது நீதிபதியின் முடிவிற்காக வழக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே மூன்றாவது நீதிபதியின் முடிவை தெரிந்து கொள்ளாமல் உச்சநீதிமன்றம் இந்த விசயத்தில் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என கபில்சிபில் தனது வாதங்களை முன்வைத்துள்ளார்.

SupremeCourt SenthilBalaji ED

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதியான சூர்யகாந்த் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதன்படி, ஒரு வாரத்திற்குள் உடனடியாக மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை அமையுங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.