தமிழ்நாடு

சரணடைய சசிகலாவுக்கு அவகாசம் தரமுடியாது: உச்சநீதிமன்றம்

webteam

நீதிமன்றத்தில் சரணடைய சசிகலாவுக்கு அவகாசம் தர முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று சரணடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சரண்டைய 2 வாரங்கள் கால அவகாசம் தர வேண்டும் என்று பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்திலும் சசிகலா சார்பில் வழக்கறிஞர் கே.டி.எஸ்.துல்சி வாய்மொழியாக இதேகோரிக்கையை முன்வைத்தார். ஆனால், நீதிமன்றத்தில் சரணடைய சசிகலாவுக்கு அவகாசம் தர முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால், பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா உள்ளிட்டோர் உடனடியாக சரணடைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.