தமிழ்நாடு

ம.பி.யில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

webteam

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநில காங்கிரசின் தலைவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா சமீபத்தில் அந்த கட்சியில் இருந்து விலகினார். இதனையடுத்து அவரது ஆதரவு அமைச்சர்கள் 6 உட்பட 22 எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் வழங்கினர். இதனையடுத்து மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு கோருமாறு முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் இரண்டு முறை உத்தரவிட்டாலும், அது சபாநாயகரின் முடிவு என்று கமல்நாத் தெரிவித்து விட்டார். இதனிடையே கமல்நாத் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி பாஜக மூத்த தலைவர் சிவ்ராஜ் சிங், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை கடந்த இரண்டு நாட்களாக விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறையை முடிக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளார்.