காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 120 ஆண்டுகளாக நீடித்துவரும் வடகலை, தென்கலை பிரச்சினை குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை மத்தியஸ்தராக நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 120 ஆண்டுகளாக நீடித்துவரும் வடகலை, தென்கலை பிரச்சினை குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை மத்தியஸ்தராக நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக நாராயணன் என்பவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை மேற்கொண்ட தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மாலாபக்சி ஆகியோர் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது மத்தியஸ்தரை நியமித்து தீர்வுகாண இரண்டு தரப்பு வழக்கறிஞர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து தலைமை நீதிபதிஅமர்வு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரச்சினைக்கு தீர்வுகாண தலைமை மத்தியஸ்தராக முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலை நியமிப்பதாக கூறியது. மேலும் தமிழ், சமஸ்கிருதம் அறிந்த கோயிலின் சடங்குகள், வரலாறு அறிந்த இருவரை தமக்கு உதவியாக தலைமை மத்தியஸ்தர் நியமித்துக் கொள்ளலாம் எனவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு வரும் மார்ச் 13ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.