தமிழ்நாடு

தமிழகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் யார்? யார்? - உச்ச நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் யார்? யார்? - உச்ச நீதிமன்றம் கேள்வி

Sinekadhara

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரத்தை திரட்ட தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்த நிலையில் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் மற்றும் நிவாரணத்தொகைகளை அறிவித்துள்ளன. அதன்படி, மத்திய அரசு ரூ.10 லட்சம் நிவாரணத்தொகையாக அறிவித்துள்ளது. அதேபோல் மாநில அரசுகள் கல்விச்செலவை ஏற்றுக்கொண்டதுடன், நிவாரணங்களையும் அறிவித்துள்ளது. இதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டு கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை கண்டறிந்து விவரங்களை அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறியும் பணி சிறப்பாக நடக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. எனவே தமிழக அரசு கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் மாவட்டவாரியாக விவரங்களைத் திரட்டி 24 மணிநேரத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுவிடம் தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் செயல்பாடு குறித்து நீதிமன்றத்திற்கு உதவ அமைக்கப்பட்ட வழக்கறிஞர் அளித்த தகவலின்பேரில், குழந்தைகளின் விவரங்களை கண்டறியும் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்தும் என நம்புகிறோம் என்றும் கூறியுள்ளது.