தமிழ்நாடு

கழிப்பறை வசதியுடன் பெங்களூருக்கு ஒரு சூப்பர் பஸ் மக்கா..!

கழிப்பறை வசதியுடன் பெங்களூருக்கு ஒரு சூப்பர் பஸ் மக்கா..!

webteam

அதிநவீன வசதிகளுடன் கோவையில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு கர்நாடக அரசுப் பேருந்து இன்று முதல் சேவையை துவங்கியுள்ளது.

தொழில் நகரான கோவையில் இருந்து பெங்களூருவிற்கு அதிகளவிலான ரயில்களும் இயக்கபடாத நிலையில், தற்போது அதிநவீன வசதிகளுடன் முதல் முறையாக பெங்களூருவிற்கு பேருந்து சேவையை கர்நாடக அரசு பேருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பேருந்து சேவை இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பெங்களூருவிற்கு அதிநவீன வசதிகளுடன் செல்லும் இந்தப் பேருந்தில் பயணிப்பவர்களுக்கு வை-பை வசதியுடன் கூடவே கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

இந்தப் பேருந்து கோவையில் இருந்து புறப்பட்டு பெங்களூரூ விமான நிலையத்தை 8 மணி நேரத்தில் சென்றடைகிறது. மதியம் 12 மணிக்கு புறப்பட்டு இரவு 8  மணிக்கு பெங்களூரை அடையும். இதனையடுத்து மீண்டும் அதிகாலை 3 மணிக்கு புறப்படும் பேருந்து காலை 10.45 மணிக்கு கோவை வந்தடையும். இந்தப் பேருந்தில் பயணம் செய்ய ரூ.1100 கட்டணமாக வசூலிக்கபடுகிறது. 

தகவல்கள் :  சுஜாதா, கோவை.