தமிழ்நாடு

ஞாயிறு முழு முடக்கம் தளர்வு: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஞாயிறு முழு முடக்கம் தளர்வு: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

kaleelrahman

ஞாயிறு முழு முடக்கம் தளர்த்தப்பட்டதையடுத்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

வழக்கமாக வார இறுதி நாட்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். 3 வாரங்களாக ஞாயிறு முழுமுடக்கத்தால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் குறைந்து முழுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கொடைக்கானல் மலை பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி வாழும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.