தமிழ்நாடு

தொடங்கியது அக்னி நட்சத்திரம்

தொடங்கியது அக்னி நட்சத்திரம்

webteam

கோடையின் உச்சம் என்று கருதப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்று தொடங்கியுள்ளது. இது வரும் 28ம் தேதி முடிவடைகிறது.

தற்போது தமிழகத்தில் ஈரப்பதம் குறைந்து வறண்ட‌ வானிலை காணப்படுவதால் வெப்பத்தின் தாக்கம் இனி வரும் நாட்களில் தொடர்ந்து அதிகரிக்கும் என ‌வானிலை ஆய்வு ‌மையம் கூறியுள்ளது. மார்ச் மாதம் முதலே வெப்பம் ‌அதிகரித்த நிலையில் அக்னி நட்சத்திர கால ‌‌கட்ட‌த்தில் அனல் காற்று வீச வாய்ப்‌புள்ளதாக வா‌னிலை ஆய்வு ‌‌மையம் ‌கூறியுள்ளது.

வெப்பம் அதிகபட்சமாக 113 டிகிரி பாரன்ஹீட் வரை செல்லும் என்றும் கூறப்படுகிறது. ‌‌