பட்டாசு ஆலைகளில் ஏற்பகோடைக்காலத்தில் நிவாரணம் வழங்க வேண்டும்: பட்டாசு உற்பதியாளர்கள்டும் வெடி விபத்துகளை தடுப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் சிவகாசியில் நடைபெற்றது.
சிவகாசி பகுதியில் தொடர் பட்டாசு ஆலை வெடி விபத்துக்களை தடுக்கும் விதமாக பட்டாசு உற்பதியாளர்களுக்கான பட்டாசு விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. வருவாய்க் கோட்டாட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பாதுகாப்பான வகையில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட வேண்டும், கோடை காலங்களில் நிலவும் கடும் வெயிலை கவனத்தில் கொண்டு ரசாயன மூலப்பொருட்களை பாதுகாப்பான முறையில் கலவை செய்ய வேண்டும் என வருவாய்துறையினர் அறிவுறுத்தினர். அப்போது பேசிய பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசுக்கான தனி வாரியமும், தனி அமைச்சகமும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் கோடை காலங்களில் ஏற்படும் வெடி விபத்துகளை தடுக்கும் வகையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பட்டாசு ஆலைகளில் உற்பத்தியை நிறுத்த தயாராக உள்ளதாகவும் அதற்கு அரசு பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.