தமிழ்நாடு

சுகேஷ் சந்திரசேகருக்கு சிறையில் சித்திரவதை?

சுகேஷ் சந்திரசேகருக்கு சிறையில் சித்திரவதை?

webteam

இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் கைதான தரகர் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் துன்புறுத்தப்படுவதாக கூறிய புகார் குறித்து விளக்கம் அளிக்க திகார் சிறைச்சாலை நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

டெல்லி உயர் நீதிமன்றம்‌ இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. மோசமான கிரிமினல் கைதிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள சிறை அறையில் சுகேஷை அடைத்தது ஏன் என்றும் நீதிபதி அசோக் குமார் கேள்வி எழுப்பினார். சுகேஷ் சிறையில் சித்திரவதைப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி, திகார் சிறை நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். 

இவ்விசாரைண ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரும் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், சுகேஷின் ஜாமீன் மறுக்கப்பட்டது.