இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீதான பணமோடி வழக்கில் கோவை நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கர்நாடக அரசின் ஒப்பந்தம் பெற்றுத்தருவதாகக் கூறி கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜவேலுவிடம் 2 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயை சுகேஷும், அவரது தந்தையும் மோசடி செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக கோவை 2 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு சுகேஷ் சந்திரசேகரை டெல்லி காவல்துறையினர் அழைத்து வந்தனர். வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சுகேஷின் தந்தை சந்திரசேகரும் நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் சுகேஷ் மற்றும் அவரது தந்தை சந்திரசேகர் ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, சுகேஷை காவல்துறையினர் ரயிலில் டெல்லி அழைத்துச் சென்றனர்.