தமிழ்நாடு

செல்வமகள் சேமிப்பு கணக்கு - நாட்டிலேயே தமிழகம் முதலிடம்

செல்வமகள் சேமிப்பு கணக்கு - நாட்டிலேயே தமிழகம் முதலிடம்

webteam

அஞ்சலகங்களில் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக செல்வமகள் சேமிப்பு கணக்கு என்ற சிறு சேமிப்பு திட்டத்தை 2015ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், முதலில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டுமென இருந்தது. பின்னர் கிராமப்புற மக்களும் அதிகம் பயன்பெறும் வகையில், அந்தத் தொகை 250 ரூபாயாக குறைக்கப்பட்டது. 

பெண் குழந்தைகளின் உயர்கல்விக்கு இந்தத் திட்டம் உதவியாக இருக்கும் என்பதால், பெற்றோர் இதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் கடந்த ஜூன் 30ஆம் தேதி வரை, 15 லட்சத்து 95 ஆயிரம் செல்வமகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகளில் ரூ.2,940 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தில், 15 லட்சத்து 9 ஆயிரம் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.