சுஜித்தின் மாமா கடந்து 5 மாதங்களுக்கு முன்பு கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித், 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் தோல்வி அடைந்ததால் உயிரிழந்தான். இந்நிலையில் சுஜித்தின் மாமா லியோ ஆரோக்கியதாஸ் 5 மாதங்களுக்கு முன்னர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,
43 வயதான லியோ ஆரோக்கியதாஸ் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த போது கிணற்றில் விழுந்து அவர் உயிரிழந்தார்.2 மீட்டர் விட்டம், 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் கோழி விழுந்துள்ளது. கோழியை பிடிக்க கிணற்றுக்குள் இறங்கியுள்ளார் ஆரோக்கியதாஸ். மீண்டும் கயிறு மூலம் மேலே ஏறி வந்த போது 60தாவது அடியில் கை நழுவி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்ததால் பலத்த காயம் அடைந்த ஆரோக்கியதாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.