தமிழ்நாடு

சுகேஷின் ஜாமின் மனு மீது இன்று விசாரணை

சுகேஷின் ஜாமின் மனு மீது இன்று விசாரணை

webteam

இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தர டிடிவி தினகரனிடம் பேரம் பேசிப் பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள, சுகேஷ் சந்திரசேகரின் ஜாமின் மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.

அதிமுக அம்மா அணியினருக்கு இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுத்தர, லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாக சுகேஷ் சந்திரசேகர்

என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகரின் ஜாமின் மனு மீதான உத்தரவை TIS HAZARI நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.

இதுதொடர்பாக சனிக்கிழமையன்று நடைபெற்ற விசாரணையின் போது சுகேஷிற்கு ஜாமின் வழங்க டெல்லி காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சுகேஷிற்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரைக் கைது செய்ய உள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.