அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்காக ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், பழனி மலை அடிவாரத்தில் ரகசிய பூஜை நடத்தியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா இடையே உச்சகட்ட மோதல் நிலவுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கவும், சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து விடுதலை பெற வேண்டியும், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன், பழனி மலை அடிவாரத்தில் ரகசிய பூஜை நடத்தியுள்ளார். புலிப்பாணி ஆசிரமத்தில் இந்த பூஜை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சுதாகரன் சிறப்பு பூஜை நடத்தியதால், அந்த நேரத்தில் ஆசிரமத்திற்குள் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படவில்லை.