தமிழ்நாடு

இரவில் சைக்கிளில் திடீர் ஆய்வு - சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி அதிரடி

Veeramani

சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி சாதாரண உடையில் திடீரென நள்ளிரவில் சைக்கிள் மூலம் ரோந்து பணி மேற்கொண்டார். சுமார் ஒன்றரை மணி நேரம் சைக்கிளில் வடக்கு மண்டலத்தில் உள்ள பூக்கடை மற்றும் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட காவல் மாவட்டங்களில் இருக்கும் 8 காவல் நிலையங்களுக்கு சைக்கிளிலேயே சென்று ஆய்வு பணி செய்தார்.  



சுமார் 9 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் வடசென்னை பகுதிகளில் பயணம் செய்து, இரவு ரோந்து வாகன காவலர்கள் மற்றும் பீட் அதிகாரிகள், காவல்துறையினர் எவ்வாறு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என ஆய்வு மேற்கொண்டார்.  

இந்த ஆய்வினை மேற்கொண்டதற்கான முக்கிய காரணமாக,  காவல்துறையினரை விழிப்போடு பணியை மேற்கொள்ள சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி  காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார், மேலும் பொதுமக்களிடமும் கருத்துகளை கேட்டறிந்தார்.

சென்னை நகரம் முழுவதுமே பாதுகாப்பினை அதிகரித்துள்ளது  காவல்துறை, குற்றச்சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் காவல் துறையினர் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என காவல் துறை உயர் அதிகாரிகள் அடிக்கடி திடீர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.