புழலில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. ஓட்டுநர் காரை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்ததால் உயிர் தப்பியது.
சென்னை லட்சுமிபுரத்தை சேர்ந்த டிராவல்ஸ் கார் ஓட்டுநர் ஜான் செங்குன்றத்தில் சவாரி முடித்து விட்டு காரில் தமது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். புழல் செக்போஸ்ட்டை கடக்கும் போது காரின் என்ஜினில் புகை வந்து தீப்பிடித்துள்ளது. இதனையடுத்து காரை சாலையோரம் நிறுத்திய டிரைவர் காரை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து கார் முன்பகுதியில் மளமளவென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் காரின் முன்பகுதி தீயில் கருகி சேதமானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.