தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் மக்களா? பயங்கரவாதிகளா?: சுப்பிரமணியன் சுவாமி

webteam

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் மக்களா? அல்லது பயங்கரவாதிகளா? என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, முழுமையான அறிக்கை கிடைக்காததாலேயே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்கவில்லை என கூறினார். கூடங்குளம் உள்பட தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களின் பின்னணியில் தீவிரவாதிகள் இருந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் அனைவரும் பாமர மக்களா? அல்லது பயங்கரவாதிகளா என்ற விவரம் தெரியவேண்டும் என்றும் கூறினார். 

வீரமாக பேசிவந்த சீமான் உள்ளிட்டோர் தற்போது காணாமல் போய்விட்டதாகவும் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார். ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினி இன்று என்ன சொல்வார், நாளை என்ன சொல்வார் என கூற முடியாது என்றும் நடிகரின் கருத்துக்கு தான் பதில் கூற முடியாது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.