போராட்டக்காரர்களை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்க வேண்டும் என்ற நடிகர் கமல்ஹாசனின் கருத்து முட்டாள் தனமானது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, மதுரையில் போராட்டக்காரர்களை சந்திக்க முதலமைச்சர் முயன்றபோது நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், போராட்டக்காரர்கள் மீது சமூகவிரோதிகள் என்ற முத்திரையைக் குத்த வேண்டாம் என்றும், அவர்களை முதலமைச்சர் சந்தித்திருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.