தமிழ்நாடு

 “தமிழக அரசின் முடிவால் பேனர் கலாச்சாரம் தொடர வாய்ப்பு” - சுபஸ்ரீயின் தாய் வேதனை..!

webteam

சுபஸ்ரீயின் மறைவுக்குப் பின் பேனர்‌ கலாச்சாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பேனர் வைக்க அனுமதி பெறப்பட்டிருப்பது கவலை அளிப்பதாக அவரின் தாய் கீதா தெரிவித்துள்ளார். 

புதிய தலைமுறையின் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், தமிழக அரசின் முடிவால் பேனர் கலாச்சாரம் தொடர வாய்ப்புள்ளதாகக் கூறினார். 

மேலும், “பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி விழும் என்பது கேள்விக்குறி. பேனர் வைத்துதான் பிரதமரை வரவேற்க‌ வேண்டுமா? சுபஸ்ரீயின் ஆன்மா சாந்தியடையும் என எதிர்பார்த்தோம். சுபஸ்ரீயின் மறைவே இறுதியாக இருக்கும் என நினைத்தோம்.” எனத் தெரிவித்தார். 

முன்னதாக, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களுக்கு இடையூறின்றி பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.