தமிழ்நாடு

“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்?- உயர்நீதிமன்றம்

Rasus

உங்கள் வீட்டு மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை அருகே சில தினங்களுக்கு முன்பு சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீயின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஜெயகோபால் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உங்கள் வீட்டு மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. அத்துடன், சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைத்ததற்கு காரணன் இல்லை என கூறும் நீங்கள், இரண்டு வாரங்கள் தலைமறைவாக இருந்தது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு விபத்து நடத்த பிறகு வழக்கமான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன் என ஜெயகோபால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.