தமிழ்நாடு

சுபஸ்ரீ தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற திமுக தரப்பில் வாதம்

Rasus

சென்னையில் பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ தொடர்பான 2 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என திமுக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

சென்னை பள்ளிக்கரணை அருகே சில தினங்களுக்கு முன்பு சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீயின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில், சென்னை மாநகராட்சி, காவல்துறை தரப்பில் இடைக்கால அறிக்கை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, கடந்த 2 வாரங்களாக காவல்துறை, மாநகராட்சி, ஆட்சியர் என யாரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்பி தனது வாதத்தை முன்வைத்தார். வழக்கு விசாரணையை டிஜிபி கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அத்துடன், சுபஸ்ரீ தொடர்பான 2 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் திமுக வாதத்தை முன்வைத்தது. இதனிடையே பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி எங்கே? அவர் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டாரா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.