தமிழ்நாடு

சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவராக சுப. வீரபாண்டியன் நியமனம்

JustinDurai
சமூக நீதி கண்காணிப்பு குழுவின் தலைவராக சுப. வீரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமூகநீதி அளவுகோல் ஆனது சட்டப்படி முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் 'சமூகநீதி கண்காணிப்புக் குழு' அமைக்கப்படும் எனவும், இந்த கண்காணிப்பு குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அளவுகோல், முறையாக முழுமையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வதோடு, இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யும் எனவும், இக்குழுவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் எனவும் சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்கள்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக கீழ்காணும் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து சமூக நீதி கண்காணிப்புக் குழுவினை அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் - தலைவர்
முனைவர் கே. தனவேல், இ.ஆ.ப., (ஓய்வு) - உறுப்பினர்
பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் - உறுப்பினர்
கவிஞர் மனுஷ்யபுத்திரன் - உறுப்பினர்
ஏ. ஜெய்சன் - உறுப்பினர்
பேராசிரியர் முனைவர் ஆர்.ராஜேந்திரன் - உறுப்பினர்
கோ.கருணாநிதி - உறுப்பினர்
இக்குழுவில் சமூக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர், உறுப்பினர் செயலராக அங்கம் வகிப்பார்.