தமிழ்நாடு

நிலத்தை பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர்: வெளியானது சிசிடிவி காட்சிகள்

நிலத்தை பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர்: வெளியானது சிசிடிவி காட்சிகள்

நிவேதா ஜெகராஜா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சார் பதிவாளர் ஒருவர் லஞ்சம் பெறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

கலவையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேட்டைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சார் பதிவாளராக உள்ளார். இவர் பத்திரப்பதிவுக்கு வருவோரிடம் லஞ்சம் பெறுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில், மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவரிடம் லஞ்சம் பெறும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. ஆதிமூலத்தின் நிலத்தை பார்வையிடவும் பதிவு செய்யவும் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறும் காட்சிகள் அதில் உள்ளன.