தமிழ்நாடு

நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த பெண்... தக்க நேரத்தில் உதவிய ஆய்வாளர்..!

நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த பெண்... தக்க நேரத்தில் உதவிய ஆய்வாளர்..!

Rasus

நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தக்க நேரத்தில் உதவினார். இதனையடுத்து அப்பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

சென்னை தலைமைச் செயலக காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி. இவர் நேற்றிரவு கேஎச் சாலை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு வயதான பெண் சாலையில் அழுது கொண்டே, அங்கும் இங்கும் சென்றுள்ளார். இதனையடுத்து அப்பெண்ணிடம், என்ன பிரச்னை என ஆய்வாளர் ராஜேஸ்வரி கேட்டுள்ளார். அப்போது அந்தப் பெண் தன் பெயர் சகுந்தலா என்றும் தன் மகள் ஷீலா பிரசவ வலியால் துடிப்பதாகவும், அதனால் உதவிக்கு ஆளை தேடுவதாகவும் கூறினார்.

இதனையடுத்து உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி உடனடியாக ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ஆம்புலன்ஸ் வர நேரமான காரணத்தினாலும், அப்பகுதி ஆம்புலன்ஸ் செல்ல முடியாத பகுதி என்பதாலும் தனது போலீஸ் ஜீப்பில் அப்பெண்ணை ராஜேஸ்வரி ஏற்றினார். பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அதன்பின் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட ஷீலா, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் ஷீலாவுக்கு இன்று அதிகாலை அழகிய பெண் குழந்தை பிறந்தது.

உதவியாளர் ராஜேஸ்வரி மட்டுமில்லாமல் போலீசார் செல்வராஜ், ராஜசேகர் ஆகியோரும் தக்க நேரத்தில் உதவியுள்ளனர். தங்கள் வீட்டில் ஆண் துணை இல்லாத நிலையில், தக்க நேரத்தில் உதவிய போலீசாருக்கு ஷீலாவின் குடும்பத்தினர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.