தமிழ்நாடு

நீட் தேர்வால் மருத்துவக் கனவு தகர்ந்தது: வருந்தும் அரசுப் பள்ளி மாணவிகள்

நீட் தேர்வால் மருத்துவக் கனவு தகர்ந்தது: வருந்தும் அரசுப் பள்ளி மாணவிகள்

webteam

197க்கு மேல் கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போனதாக, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு பள்ளியில் படித்த மாணவிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

வந்தவாசி அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த இரட்டை சகோதரிகளான நிலா பாரதி மற்றும் அன்புபாரதி ஆகியோர் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த போதும் நீட் தேர்வில் ‌குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தங்களது மருத்துவ படிப்பு கனவு தகர்ந்த‌துள்ளதாக அம்மாணவிகள் கவலை தெரிவிக்கின்றனர்‌. அரசு பள்ளியில் படித்த தங்களுக்கு, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் நீட் தேர்வெழுத சொன்னதாலேயே தங்களால் அதில் 151க்கு மேல் எடுக்க முடியவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில் மாநில அரசு ‌நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாணவிகள் கோ‌ரிக்கை விடுத்துள்ளனர்.