தமிழ்நாடு

அடி, உதை, ஆபாச அர்ச்சனை: மெரினாவில் போராடியவர்கள் புகார்

அடி, உதை, ஆபாச அர்ச்சனை: மெரினாவில் போராடியவர்கள் புகார்

Rasus

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய தங்களை அடித்து ஆபாசமாகத் திட்டி கைது செய்ததாக சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய மாணவர்கள், மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர்கள், பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் திரைப்பட இயக்குனர் கவுதமன் தலைமையில் சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையிலுள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், விவசாயிகளுக்கு ஆதரவாகவே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், கைது செய்ய வந்த காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் தங்களை அடித்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டியதால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

பின்னர் பேசிய இயக்குனர் கவுதமன், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இளைஞர்களைத் திரட்டி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த இருப்பதாகத் தெரிவித்தார்.