தமிழ்நாடு

அத்திப்பட்டு: கற்களால் எறிந்து, கத்தியால் தாக்கிக் கொண்ட மாணவர்கள் - 4 பேர் கைது

அத்திப்பட்டு: கற்களால் எறிந்து, கத்தியால் தாக்கிக் கொண்ட மாணவர்கள் - 4 பேர் கைது

sharpana

அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் மாணவர்கள் நேற்று மோதிக்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் நேற்று மாலை அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற ரயிலில் கத்தியுடன் மோதலில் ஈடுபட்டு ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி இறங்கி சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் 4 பேரை பிடித்து ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர்.

புறநகர் ரயிலில் சண்டை போட்டபடி ரயிலை நிறுத்தி மாணவர்கள் இறங்கி ஓடும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் 4 மாணவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பொன்னேரியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.